OUR CLIENTS
ஏப்ரலில் ஜி.எஸ்.டி. வரி வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது - மத்திய நிதியமைச்சகம் அறிக்கை
ஏப்ரலில் ஜி.எஸ்.டி. வரி வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது - மத்திய நிதியமைச்சகம் அறிக்கை Posted on 01-May-2018 ஏப்ரலில் ஜி.எஸ்.டி. வரி வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது - மத்திய நிதியமைச்சகம் அறிக்கை

டெல்லி 

ஜி.எஸ்.டி. வரி வருவாய் தொடர்பாக, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய்த்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் மத்திய ஜி.எஸ்.டி. 18 ஆயிரத்து 652 கோடி ரூபாயும், மாநில ஜி.எஸ்.டி. 25 ஆயிரத்து 704 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி பொருட்களுக்கு வசூலிக்கப்படும் வரி உள்பட ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மூலம் 50 ஆயிரத்து 548 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக கூறியுள்ள மத்திய நிதியமைச்சகம், 8 ஆயிரத்து 554 கோடி ரூபாய் அளவுக்கு செஸ் வரியும் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் ஜி.எஸ்.டி.யின் கீழ் பதிவு செய்த வணிகர்களில் சுமார் 60 லட்சத்து 47 ஆயிரம் பேர், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கணக்குகளை தாக்கல் செய்துள்ளதாகவும், ஜி.எஸ்.டி. வரி மூலம் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 458 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் நிதி அமைச்சகம் கூறியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வருவாய் கூடியிருந்தாலும், பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதை, இது பிரதிபலிப்பதாகவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Label