OUR CLIENTS
சிறப்பு அந்தஸ்து விவகாரம் : ஏழுமலையான் முன்பு மோடி ஏமாற்றிவிட்டார்...மத்திய அரசுக்கு எதிராக அறப்போட்டம்
சிறப்பு அந்தஸ்து விவகாரம் : ஏழுமலையான் முன்பு மோடி ஏமாற்றிவிட்டார்...மத்திய அரசுக்கு எதிராக அறப்போட்டம் Posted on 01-May-2018 சிறப்பு அந்தஸ்து விவகாரம் : ஏழுமலையான் முன்பு மோடி ஏமாற்றிவிட்டார்...மத்திய அரசுக்கு எதிராக அறப்போட்டம்

திருப்பதி

சிறப்பு மாநில அந்தஸ்து தருவதாக கூறி ஏமாற்றிய மத்திய அரசை கண்டித்து அறப்போராட்டம் தொடரும் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து திருப்பதியில் அவரது தெலுங்கு தேச கட்சி சார்பில் நம்பிக்கை துரோக என்ற அரசியல் பெயரில் மாநாடு நடத்தப்பட்டது. அதில் பேசிய நாயுடு 4 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் வைத்து ஏழுமலையானை சாட்சியாக கொண்டு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்குவதாக மோடி தம்மிடம் கூறிவிட்டு சென்றதாக கூறினார்.

இதையடுத்து 2014-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியன்று திருப்பதியில் நடந்த மாநாட்டில் மோடியின் பேச்சும் அதில் அவர் அளித்த உறுதியும் திரையிட்டு காட்டப்பட்டது. மாநாட்டின் நிறைவின் போது நாயுடு முன்னிலையில் அவரது கட்சியில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகியுள்ள திருப்பதி பகுதி நிர்வாகிகள் பலர் இணைந்தனர். இந்த மாநாடு நடந்து கொண்டிருந்த போதே பெண் ஒருவர் திடீரென பாதுகாப்பை மீறி மேடையில் ஏறி சந்திரபாபு நாயுடுவை கட்டி பிடித்தார். பின்னர் விசாரணையில் அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்தது.

Label