OUR CLIENTS
பகுத்தறிவுக்கு சற்றும் பொருந்தாத கருத்துக்களை கூறும் பாஜக முதலமைச்சர்கள் : காங்கிரஸ் குற்றச்சாட்டு
பகுத்தறிவுக்கு சற்றும் பொருந்தாத கருத்துக்களை கூறும் பாஜக முதலமைச்சர்கள் : காங்கிரஸ் குற்றச்சாட்டு Posted on 01-May-2018 பகுத்தறிவுக்கு சற்றும் பொருந்தாத கருத்துக்களை கூறும் பாஜக முதலமைச்சர்கள் : காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி

பகுத்தறிவுக்கு சற்றும் பொருந்தாத சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதன் மூலம் பாரதிய ஜனதா கட்சி முதலமைச்சர்கள் தங்கள் பதவியை கேலி கூத்தாகியிருப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

பழங்கால இதிகாச கதாபாத்திரமான நாரத முனிவர், கூகுலுக்கு முன்னோடி என்று குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியின் கருத்து மக்கள் நகைப்புக்குரிய சூழலை ஏற்படுத்திவிட்டதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரேணுகா சவுத்ரி குற்றம்சாட்டியுள்ளார். 

இதேபோன்று பட்டதாரி இளைஞர்கள் பீடா கடை வைக்க வேண்டும், மகாபாரத காலக்கட்டத்தில் இன்டர்னெட் பயன்பாடு போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகள் மூலம் திரிபுரா முதலமைச்சர் பிப்லப் தேவும் மக்களின் கேலிக்கி ஆளாகியிருப்பதாக அவர் தெரிவித்தார். நாட்டின் பிரதமரே நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களை பார்த்து கேலி செய்து சிரிக்கும் நிலையில் பாரதிய ஜனதா முதலமைச்சர்கள் மீது எப்படி நடவடிக்கை பாயும் என்றும் ரேணுகா கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தது குறித்து திரிபுரா முதலமைச்சர் நாளை பிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா ஆகியோரிடம் நேரில் விளக்கம் அளிக்கயிருப்பது குறிப்பிடத்தக்கது.

Label