OUR CLIENTS
குட்கா முறைகேடு தொடர்பான ஆதாரங்களை அழிக்க அதிமுக அரசு முயற்சி- ஸ்டாலின்
குட்கா முறைகேடு தொடர்பான ஆதாரங்களை அழிக்க அதிமுக அரசு முயற்சி- ஸ்டாலின் Posted on 01-May-2018 குட்கா முறைகேடு தொடர்பான ஆதாரங்களை அழிக்க அதிமுக அரசு முயற்சி- ஸ்டாலின்

சென்னை

குட்கா ஊழலில் சிக்கியுள்ள அமைச்சரை காப்பாற்ற டி.ஜி.பி முயற்சி செய்வதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

குட்கா ஊழலில் இருந்து தமிழக டி.ஜி.பி தன்னையும் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் சட்டவிரோதமாக குட்கா தயாரிக்கும் ஆலையை திமுகவினர் கண்டுபிடித்தனர். முறைக்கேட்டை கண்டுபிடித்த திமுகவினர் மீதே வழக்கு போட்டு போலீசார் கைது செய்தனர். திமுகவினர் 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதற்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிபிஐ விசாரணையை சீர்குலைத்து ஆதாரங்களை அழிக்க போலீசார் முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

குட்கா விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது. குட்கா ஊழலை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் திமுக தரப்பை விசாரிக்க கேவியட் மனு செய்துள்ளது. கடைகளில் குட்கா, பான்மசாலா விற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி கடைகளில் குட்கா, பான்மசாலா விற்பனை செய்யப்படுகிறது. குட்கா விற்க அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு குட்கா மொத்த வியாபாரி லஞ்சம் எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Label