OUR CLIENTS
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு குறித்து அமைச்சர்கள் குழு பரிசீலனை: ராம்விலாஸ் பஸ்வான் தகவல்
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு குறித்து அமைச்சர்கள் குழு பரிசீலனை: ராம்விலாஸ் பஸ்வான் தகவல் Posted on 01-May-2018 எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு குறித்து அமைச்சர்கள் குழு பரிசீலனை: ராம்விலாஸ் பஸ்வான் தகவல்

புதுடெல்லி

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மத்திய அரசு பணிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் குழு ஆலோசனை செய்து வருவதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் நிருபர்களிடம் கூறியதாவது:-வன்கொடுமை தடுப்பு சட்டம், அரசுப்பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு, பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீடு ஆகிய 3 விஷயங்களில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பாதகமாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. 

இதற்கு எதிராக நாடு முழுவதும் எஸ்சி, எஸ்டி வகுப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுபற்றி ஆராய ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.வன்கொடுமை சட்ட திருத்தத்துக்கு எதிராக மத்திய அரசு ஏற்கனவே மறு ஆய்வு மனு தாக்கல் செய்து விட்டது. அதுபோல், பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்யவும், பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டை பாதுகாக்கவும் சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம். தேவைப்பட்டால், அவசர சட்டமும் கொண்டு வரப்படும்.இவ்வாறு ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

Label