OUR CLIENTS
11 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு : ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்
11 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு : ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் Posted on 01-May-2018 11 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு : ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்

புதுடெல்லி

11 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் ஓ.பி.எஸ் தரப்பு கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 11 எம்.எல்.ஏ.க்களும் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். அவர்கள் 1 1 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்யலாம் என்றும் அனுமதி அளித்தது. 

இதனையடுத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சட்டப்போராட்டம் தொடரும் என தெரிவித்திருந்தார். தினகரன் தரப்பிலும் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. 11 எம்.எல்.ஏ.க்களும் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளனர். திமுக தரப்பு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதங்களை கேட்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Label