OUR CLIENTS
மோசமான பீல்டிங்கால் தோல்வி... விராத் கோஹ்லி விரக்தி
மோசமான பீல்டிங்கால் தோல்வி... விராத் கோஹ்லி விரக்தி Posted on 01-May-2018 மோசமான பீல்டிங்கால் தோல்வி... விராத் கோஹ்லி விரக்தி

பெங்களூரு

‘நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், மோசமான பீல்டிங்கால் தோற்றோம். இது போன்ற பீல்டிங்கை வைத்துக் கொண்டு வெற்றி பற்றி நினைக்க எங்களுக்கு தகுதியில்லை’ என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார்.

எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசியது. ஆர்சிபி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன் குவித்தது. கேப்டன் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 68 ரன் (44 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். அடுத்து களமிறங்கிஅ கொல்கத்தா 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்து வென்றது. சுனில் நரைன் 27, உத்தப்பா 36, கேப்டன் கார்த்திக் 23 ரன் எடுத்தனர். தொடக்க வீரர் கிறிஸ் லின் 62* ரன் (52 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

நடப்பு சீசனில் ஆர்சிபி அணி இதுவரை விளையாடி உள்ள 7 லீக் ஆட்டத்தில் 5வது தோல்வியை சந்தித்து 4 புள்ளிகளுடன் 7வது இடத்தில் பின்தங்கியுள்ளது. நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக தோற்றது குறித்து ஆர்சிபி கேப்டன் கோஹ்லி கூறியதாவது: 
நாங்கள் விளையாடியதை பார்த்தால், வெற்றிக்கு தகுதியானவர்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் கடுமையாக முயற்சித்திருக்க வேண்டும். இது போன்ற மோசமான பீல்டிங்கை வைத்துக் கொண்டு வெற்றி பற்றி நினைக்க எங்களுக்கு தகுதி இல்லை. ஒரு ரன் கொடுக்க வேண்டிய இடத்தில், பீல்டிங்கில் சொதப்பி பந்தை பவுண்டரிக்கு செல்ல அனுமதிப்பதை ஏற்க முடியாது. எஞ்சியுள்ள ஏழு லீக் ஆட்டத்தில், நாங்கள் ஆறு போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதை உணர்ந்துள்ளோம். 
இனி ஒவ்வொரு போட்டியையும் அரை இறுதி ஆட்டமாகவே நினைத்து விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எந்தவிதமான தயக்கம், அலட்சியம், தவறுகளுக்கும் இனி இடமில்லை. எங்கள் வீரர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தி சிறப்பாக செயல்படுவார்கள் என நம்புகிறேன்.  இவ்வாறு கோஹ்லி கூறியுள்ளார்.

Label