OUR CLIENTS
அஜர்பைஜான் கிராண்ட் பிரீ : ஹாமில்டன் சாம்பியன்
அஜர்பைஜான் கிராண்ட் பிரீ : ஹாமில்டன் சாம்பியன் Posted on 01-May-2018 அஜர்பைஜான் கிராண்ட் பிரீ : ஹாமில்டன் சாம்பியன்

பாகு

அஜர்பைஜான் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில், மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.

மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் ஹாமில்டன் 1 மணி, 43 நிமிடம், 44.291 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். பெராரி அணி வீரர் கிமி ரெய்கோனன் (+2.460) 2வது இடமும், போர்ஸ் இந்தியா அணியின் செர்ஜியோ பெரஸ் (+4.024) 3வது இடமும் பிடித்தனர். பெராரி அணி நட்சத்திர வீரர் செபாஸ்டியன் வெட்டல் (+5.329) 4வதாக வந்தார்.  மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் ரெட் புல் அணி வீரர்கள் டேனியல் ரிக்சியார்டோ, மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் ஓட்டிய கார்கள் மோதி விபத்துக்குள்ளாகின.  நடப்பு சீசனில் இதுவரை நடந்துள்ள 4 பந்தயங்களின் முடிவில், ஹாமில்டன் 70 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறார். பெராரி அணி வீரர்கள் செபாஸ்டியன் வெட்டல் (66), கிமி ரெய்கோனன் (48) அடுத்த இடங்களை பிடித்துள்ளனர். அடுத்த பந்தயமான ஸ்பெயின் கிராண்ட் பிரீ, பார்சிலோனா நகரில் 11ம் தேதி தொடங்கி 13ம் தேதி வரை நடைபெற உள்ளது

Label