OUR CLIENTS
பேஸ்புக்கை தொடர்ந்து டுவிட்டருக்கும் சிக்கல் : தனிநபர் தகவல்களை விற்றதாக குற்றச்சாட்டு
பேஸ்புக்கை தொடர்ந்து டுவிட்டருக்கும் சிக்கல் : தனிநபர் தகவல்களை விற்றதாக குற்றச்சாட்டு Posted on 01-May-2018 பேஸ்புக்கை தொடர்ந்து டுவிட்டருக்கும் சிக்கல் : தனிநபர் தகவல்களை விற்றதாக குற்றச்சாட்டு

லண்டன்

பேஸ்புக்கை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனமும் வாடிக்கையாளர்களின் அந்தரங்க தகவல்களை கசிய விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தை போலவே டுவி்ட்டரும் தங்களது நிறுவனத்திற்கு விற்றதாக வாடிக்கையாளர்கள் விவரங்களை விற்றதாக கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா அதிகாரி அலெக்சாண்டர் கோகன் தெரிவித்துள்ளார். 2014-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2015 ஏப்ரல் மாதம் வரை டுவிட்டர் நிறுவனம் தமது பயனாளர்களின் பதிவுகள் பெயர், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவுக்கு அளித்ததாக அவர் கூறியுள்ளார். 

இதனால் அதிர்ந்து போன டுவிட்டர் நிறுவனம் தன்னிலை விளக்கம் அளித்துள்ளது. விளம்பரம் தொடர்பான பணிகளில் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவுடன் சில விவரங்களை பகிர்ந்து கொண்டதாகவும், தனிப்பட்ட உரிமை தொடர்பான விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் டுவிட்டர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அத்துடன் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தை விளம்பரதாரர் பட்டியலில் இருந்து டுவிட்டர் நீக்கியுள்ளது.

Label