OUR CLIENTS
வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு Posted on 01-May-2018 வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை கண்காணித்து விரைவுபடுத்த, 3 நீதிபதிகள் குழுவை ஏற்படுத்துமாறு, அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் 8 மாத குழந்தையை, 28 வயது உறவினர் வன்கொடுமை செய்த வழக்கை விரைந்து விசாரிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசூட் அடங்கியோர் அமர்வு, உயர்நீதிமன்றங்களுக்கு சில வழிமுறைகளை தெரிவித்தது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை விரைவு நீதிமன்றம் அமைத்து, துரிதமாக விசாரிக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளது. அனைத்து உயர்நீதிமன்றங்களிலும், 3 நீதிபதிகள் அடங்கிய குழு அமைத்து, குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் வழக்குகளை கண்காணித்து, விரைவுபடுத்த வேண்டுமென்றும், தேவையின்றி ஒத்திவைக்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Label