OUR CLIENTS
ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்க முயன்ற சுங்கத்துறை அதிகாரிகள் கைது - சிபிஐ அதிரடி
ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்க முயன்ற சுங்கத்துறை அதிகாரிகள் கைது - சிபிஐ அதிரடி Posted on 01-May-2018 ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்க முயன்ற சுங்கத்துறை அதிகாரிகள் கைது - சிபிஐ அதிரடி

 மும்பை

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்க முயன்ற சுங்கத்துறை அதிகாரிகளை சிபிஐ கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்க முயன்ற சுங்கத்துறை அதிகாரிகள் கைது - சிபிஐ அதிரடி
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சுங்கத்துறை அதிகாரிகள் பொருள்களை ஏற்றுமதி செய்ய தனியார் நிறுவனத்திடம் லட்சம் கேட்டதாக சிபிஐ-க்கு புகார் வந்தது. இதையடுத்து அவர்களை பிடிக்க சிபிஐ திட்டமிட்டது. லஞ்ச பணத்தின் ஒரு பகுதியாக 5 லட்சம் ரூபாயை வாங்க முயன்ற துணை கண்காணிப்பாளர் நிகிலேஷ் சிங்கை சிபிஐ கையும் களவுவாக பிடித்தது. இதன் மூலம் இதில் தொடர்புடைய 4 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

லஞ்சம் வாங்கியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட முகேஷ், ராஜீவ், சந்தீப் மற்றும் சுதர்சன் ஆகியோரின் அலுவலகம் மற்றும் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Label