OUR CLIENTS
மும்பையை கலங்க வைத்த பத்திரிகையாளர் கொலை வழக்கு - சோட்டா ராஜன் குற்றவாளி
மும்பையை கலங்க வைத்த பத்திரிகையாளர் கொலை வழக்கு - சோட்டா ராஜன் குற்றவாளி Posted on 02-May-2018 மும்பையை கலங்க வைத்த பத்திரிகையாளர் கொலை வழக்கு - சோட்டா ராஜன் குற்றவாளி

மும்பை

மும்பை பத்திரிகையாளர் கொலை வழக்கில் சோட்டா ராஜன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பத்திரிகையாளர் ஜே டே கடந்த 2011-ல் சுட்டுக்கொல்லப்பட்டார். வழக்கில் குற்றம்சட்டப்பட்டிருந்த பெண் பத்திரிகையாளர் ஜிக்னா வோரா விடுதலை செய்யப்பட்டார். முன்னதாக மும்பையை சேர்ந்த புலனாய்வு பத்திரிகையாளர் ஜோதிர்மாய் டே. சுருக்கமாக ஜே டே என்றழைக்கப்பட்டார். இவர் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் குறித்து எதிர்மறையான கட்டுரைகளை எழுதி வந்தார். இதனால் கடந்த 2011 ஜூன் 11-ம் தேதி மும்பை புறநகர் பகுதியில் மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் நிழல் உலக தாதா சோட்டா ராஜன், பெண் நிருபர் ஜிக்னா வோரா உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இதில் வினோத் செம்பூர் என்பவர் உயிரிழந்துவிட்டார். பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக இருந்த சோட்டா ராஜன் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபரில் இந்தோனேசியாவின் பாலி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சோட்டா ராஜனிடம் நடத்திய விசாரணையில் நிழல் உலக தாதா தாவூத்துடன் நெருக்கம் காட்டியதால் ஜே டேவை கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்தார். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை மும்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த ஏப்ரல் 3-ம் தேதி 155 சாட்சிகளிடம் விசாரணை நடந்து முடிந்தது. கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஷமீர் அத்கர் மே 2-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பெண் நிருபர் ஜிக்னா வோரா விடுதலை செய்யப்பட்டார். இதனையடுத்து சோட்டா ராஜன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.

Label