OUR CLIENTS
குரங்கணி காட்டுத்தீ குறித்து எச்சரித்தும் தமிழக அரசு அலட்சியம் : மத்திய அரசு குற்றச்சாட்டு
குரங்கணி காட்டுத்தீ குறித்து எச்சரித்தும் தமிழக அரசு அலட்சியம் : மத்திய அரசு குற்றச்சாட்டு Posted on 02-May-2018 குரங்கணி காட்டுத்தீ குறித்து எச்சரித்தும் தமிழக அரசு அலட்சியம் : மத்திய அரசு குற்றச்சாட்டு

புதுடெல்லி

குரங்கணி காட்டுத்தீ விவகாரத்தில் தமிழக அரசு மீது மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
முன்னெச்சரிக்கை கொடுத்தும் தமிழக அரசு அலட்சியத்தால் தான் உயிர் சேதம் ஏற்பட்டது என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கடந்த மாதம் 11ம் தேதி ஏற்பட்ட காட்டு தீ விபத்தில் மலையேற்றத்திற்காக சென்ற 23 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதனிடையே உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்கனவே ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ராஜீவ் தத்தா என்ற வழக்கறிஞர் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். 

மேலும் இந்த வழக்கில், நாடு முழுவதும் காட்டுத்தீ பரவுவதை தடுக்கக்கோரி இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவின் மீதான விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், கடந்த ஏப்ரல் 25ம் தேதி நடைபெற்றது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் ராகேஷ் சர்மா, குரங்கணி தீ விபத்தில் வனத்துறையின் அனுமதி பெறாமல் மலையேற்றக் குழுவினர் அரசு அங்கீகரித்த பாதையை தவிர்த்து மாற்றுப் பாதையில் சென்றதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கில் பதிலளித்த மத்திய அரசு மலை காட்டுப்பகுதிகளில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவும், தீ விபத்துகளை தடுக்கவும் உரிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க தங்களுக்கு மேலும் அவகாசம் தேவை என கோரிக்கை விடுத்தது. 

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் மீதான விசாரணையை மே 2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதனை தொடர்ந்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில், குரங்கணியில் தீ விபத்து ஏற்பட்ட ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2.28 மணிக்கு எச்சரிக்கப்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய வனத்துறையின் பாரஸ்ட் ஆப் இந்தியா அமைப்பு மூலம் எச்சரிக்கை விடப்பட்டதாகவும், இ-மெயில், எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கை தரப்பட்டதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது. 

Label