OUR CLIENTS
காவிரி வழக்கு : அவகாசம் கோரும் மத்திய அரசு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
காவிரி வழக்கு : அவகாசம் கோரும் மத்திய அரசு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு Posted on 02-May-2018 காவிரி வழக்கு : அவகாசம் கோரும் மத்திய அரசு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி

காவிரி விவகாரத்தில் மேலும் 2 வார கால அவகாசம் கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

அந்த மனுவில் மே 16-ம் தேதி வரை கால அவகாசம் கேட்டு மத்திய அரசு தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்டது.  கால அவகாசம் கோருவது தொடர்பாக மனுவை இன்றே விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது. 

காவிரி நதிநீர் அவகாசம் கோரி திட்ட வரைவு அறிக்கை நாளை தாக்கல் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. அறிக்கையை தயார் செய்யும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. பணி நிறைவடையாததால் வழக்கை 2 வாரம் ஒத்திவைக்குமாறும் கோரியுள்ளது. 

முன்னதாக காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் மே 3ம் தேதிக்குள் வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து வரைவு செயல் திட்டத்தை தயார் செய்ய கொடுக்கப்பட்ட கால அவகாசம் போதாது என 2 வாரம் கால அவகாசம் கேட்டு மேல்முறையீடு செய்த மனுவையும் கடந்த வாரம் மத்திய அரசு அன்றைய தினமே திரும்ப பெற்றுக்கொண்டது. இந்த நிலையில் காவிரி விவகாரத்தில் வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள கால அவகாசம் நாளையோடு முடியவுள்ள நிலையில், தற்போது காவிரி விவகாரத்தில் மேலும் 2 வார கால அவகாசம் கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. 

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. வரைவு திட்டம் தொடர்பான மனுவோடு, மத்திய அரசின் இடைக்கால மனுவும் நாளை விசாரிக்கப்படும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுத்துள்ளது என்பதை அறிய நான்கு மாநில அரசுகளும் மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளது.

Label