OUR CLIENTS
அநாகரிகமாக நடந்துகொண்ட மெட்ரோ ரயில் ஜோடிக்கு அடி உதை - கொல்கத்தாவில் பரபரப்பு
அநாகரிகமாக நடந்துகொண்ட மெட்ரோ ரயில் ஜோடிக்கு அடி உதை - கொல்கத்தாவில் பரபரப்பு Posted on 02-May-2018 அநாகரிகமாக நடந்துகொண்ட  மெட்ரோ ரயில்  ஜோடிக்கு அடி உதை - கொல்கத்தாவில் பரபரப்பு

கொல்கத்தா

மெட்ரோ ரயிலில் பயணித்தபோது கட்டிப்பிடித்த காரணத்திற்காக இளம்ஜோடியினர் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட வீடியோ காட்சி மேற்கு வங்க மாநிலத்தில் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா நகரில் உள்ள சாந்தினி சௌக்கில் இருந்து டம்டம் ரயில் நிலையத்திற்கு மெட்ரோ ரயில் பயணம் செய்த இளம்ஜோடி ஒன்று கட்டிப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டு ஆத்திரமடைந்த சக பயணிகள், பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டதாக கூறி இளமடஜோடியை சரமாரியாக தாக்கியுள்ளனர். 

இளம்ஜோடி தாக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்து டம்டம் ரயில் நிலையத்தில் கூடிய கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இளம்ஜோடியை தாக்கிய பயணிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே தாக்குதல் குறித்து புகார் ஏதும் அளிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம் கண்காணிப்பு மேராக்களை ஆய்விட்டு வருவதாக தெரிவித்துள்ளது. 

Label