OUR CLIENTS
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு - கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடையை நீட்டித்து உத்தரவு
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு - கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடையை நீட்டித்து உத்தரவு Posted on 02-May-2018 ஏர்செல் மேக்சிஸ் வழக்கு - கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடையை நீட்டித்து உத்தரவு

புதுடெல்லி

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஜூலை 10 வரை தடையை நீடித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2006ம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதன் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

இதனிடையே சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட ஆணையம் வெளியிட்ட தகவலில், ஏர்செல் மேக்சிஸ் மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக கூறியது. இதனை தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ. 1.16 கோடி சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது. மேலும் இது தொடர்பாக சம்மன் அனுப்பியும் அமலாக்கத் துறை முன்பு கார்த்தி ஆஜராகாததால் அவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கு அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளது. 

அதில் கார்த்திக்கு முன்ஜாமீன் வழங்கினால் அவர் ஆதாரங்களை அழித்துவிட வாய்ப்பு உள்ளது. மேலும் பணப்பரிவர்த்தனை குறித்தும் அவரிடம் நாங்கள் விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே முன்ஜாமீன் வழங்க கூடாது என்று அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், கார்த்தியின் முன்ஜாமீன் மீதான விசாரணையை ஜூலை 10க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜூலை 10 வரை கைது செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டது. கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத்துறையின் வழக்கு ஜூலை 2ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Label