OUR CLIENTS
நீதிபதி கே.எம்.ஜோசப் நியமன விவகாரம் - உச்சநீதிமன்ற கொலீஜியம் இன்று ஆலோசனை
நீதிபதி கே.எம்.ஜோசப் நியமன விவகாரம் - உச்சநீதிமன்ற கொலீஜியம் இன்று ஆலோசனை Posted on 02-May-2018 நீதிபதி கே.எம்.ஜோசப் நியமன விவகாரம் - உச்சநீதிமன்ற கொலீஜியம் இன்று ஆலோசனை

புதுடெல்லி

நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க செய்யப்பட்ட பரி்ந்துரையை மத்திய அரசு ஏற்க மறுத்தது குறித்து விவாதிக்க கொலீஜியம் இன்று கூடுகிறது.

ஜனவரி 10-ம் தேதி 5 நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப், மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. 

அதில் இந்து மல்ஹோத்ரா பரிந்துரையை மட்டும் ஏற்ற மத்திய சட்ட அமைச்சகம் அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஒப்புதல் அளித்தது. ஆனால் நீதிபதி ஜோசப்பை நியமிக்க ஒப்புதல் அளிக்காமல் பரிந்துரையை கொலீஜியத்திற்கு திருப்பி அனுப்பி விட்டது. ஜோசப்பிற்கு பணி மூப்பு இல்லை என்று குறிப்பிப்பிட்ட மத்திய அரசு அவரது தகுதிகளை கவனத்துடன் ஆய்வு செய்து மீண்டும் பரிந்துரைக்க கொலீஜியத்திற்கு கோரிக்கை விடுத்தது. 

கொலீஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது நாடு முழுவதும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் நீதிபதி கே.எம்.ஜோசப் நியமனம் தொடர்பாக கொலீஜியம் இன்று கூடு பரிந்துரையை மறுபரிசீலினை செய்ய இருக்கிறது. 

Label