OUR CLIENTS
வீடு இல்லாமல் பாலத்தில் வசிக்கும் ஜாக்கிசான் மகள் ஓரின சேர்க்கையாளர் என்பதால் பெற்றோர் கைவிரிப்பு
வீடு இல்லாமல் பாலத்தில் வசிக்கும் ஜாக்கிசான் மகள் ஓரின சேர்க்கையாளர் என்பதால் பெற்றோர் கைவிரிப்பு Posted on 02-May-2018 வீடு இல்லாமல் பாலத்தில் வசிக்கும் ஜாக்கிசான் மகள் ஓரின சேர்க்கையாளர் என்பதால் பெற்றோர் கைவிரிப்பு

லண்டன்

நடிகர் ஜாக்கிசான் மகள் எட்டா நங். வீடு இல்லாமல் பாலத்தில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அவரது படங்கள் கோடிகளில் வசூல் அள்ளுகிறது. அவரது இளைய மகள் எட்டா நங், தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்று பகிரங்கமாக இணையதளத்தில் அறிவித்ததுடன், தோழி ஆன்ட்டி ஆன்ட்டுடன் ஜோடியாக இருக்கும் படத்தையும் வெளியிட்டார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தானும், தனது தோழி ஆன்ட்டி ஆன்ட்டும் வசிப்பதற்கு வீடு இல்லாமல், பாலத்தில் வசித்து வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், ‘எங்கள் இருவருக்கும் இடையே இருப்பது புனிதமான அன்பு. எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எனது பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் கேட்டோம். யாரும் உதவ முன்வரவில்லை. எனது தந்தை 395 மில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரர். அவரும் எங்களைக் கண்டுகொள்ளவில்லை. நாங்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எங்களைப் பிரித்துவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. 

எங்கள் இருவரின் அன்பை புரிந்துகொண்டு உதவி செய்ய முன்வர வேண்டும்' என்று கூறியுள்ளார். ஹாங்காங் முன்னாள் அழகி எலா நங்க்கிற்கும், ஜாக்கிசானுக்கும் 1999ம் ஆண்டு ஏற்பட்ட தொடர்பில் பிறந்தவர், எட்டா நங். ஜாக்கிசானுக்கு 1982ம் ஆண்டு ஜோன் லிம் என்பவருடன் முதல் திருமணம் நடந்து, அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். தனது மகளின் நிலை குறித்து ஜாக்கிசான் கூறும்போது, ‘ஒரு தந்தையாக எனது மகள் விஷயத்தில் நான் தோல்வி அடைந்துவிட்டேன். இந்த விவகாரத்தை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

Label