OUR CLIENTS
அதிபர் டிரம்ப் ஒரு முட்டாள்: ஒரு மண்ணும் தெரியல... வெள்ளை மாளிகை ஊழியர் தலைவர் கூறியதாக செய்தி..!
அதிபர் டிரம்ப் ஒரு முட்டாள்: ஒரு மண்ணும் தெரியல... வெள்ளை மாளிகை ஊழியர் தலைவர் கூறியதாக செய்தி..! Posted on 02-May-2018 அதிபர் டிரம்ப் ஒரு முட்டாள்: ஒரு மண்ணும் தெரியல... வெள்ளை மாளிகை ஊழியர் தலைவர் கூறியதாக செய்தி..!

வாஷிங்டன்

‘‘அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு முட்டாள்’’ என வெள்ளை மாளிகை ஊழியர்களின் தலைவர் ஜான் கெல்லி கூறியதாக செய்தி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

வெள்ளை மாளிகை ஊழியர்கள் குழுவின் தலைவராக தற்போது இருப்பவர் ஜான் கெல்லி. இவருக்கும், அதிபர் டிரம்ப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவதாக செய்தி வெளியாகி வந்தது. இந்நிலையில் என்பிசி செய்தி ஊடகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தியில், வெள்ளை மாளிகை ஊழியர்கள் பலரிடம், ஜான் கெல்லி அடிக்கடி அதிபர் டிரம்ப் ஒரு முட்டாள். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. எதையும் செய்யவும் தெரியவில்லை. அவரது கொள்கை என்ன என்பது கூட விளங்கவில்லை என்று தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது. இந்த செய்தியை ஜான் கெல்லி மறுத்துள்ளார். அவர் கூறும்போது, ‘எனக்கும்,  அதிபர் டிரம்ப்புக்கும் இடையே நல்ல உறவு முறை உள்ளது. உண்மையிலே மோசமான மனிதர்களால் இந்த கட்டுக்கதை உருவாக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Label