OUR CLIENTS
வாட்ஸ் ஆப் இணை நிறுவனர் பேஸ்புக்கில் இருந்து விலகுகிறார்
வாட்ஸ் ஆப் இணை நிறுவனர் பேஸ்புக்கில் இருந்து விலகுகிறார் Posted on 02-May-2018 வாட்ஸ் ஆப் இணை நிறுவனர் பேஸ்புக்கில் இருந்து விலகுகிறார்

சான் பிரான்சிஸ்கோ

வாட்ஸ் ஆப் இணை நிறுவனர் ஜான் கோயம் பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். 


பேஸ்புக் நிறுவனம் கடந்த 2014ம் ஆண்டு ₹1 லட்சத்து 24 ஆயிரம் கோடிக்கு வாட்ஸ் ஆப் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. வாட்ஸ் ஆப்பின் இணை நிறுவனராக ஜான் கோயம் இருந்து வந்தார். இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தைவிட்டு வெளியேறுவதாக தனது பேஸ்புக் பதிவில் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக ஜான் கோயம் தனது பேஸ்புக் பதிவில், “வாட்ஸ் ஆப் தொடங்கப்பட்டதில் இருந்து சுமார் பத்து ஆண்டுகள் பிரைன் ஆக்டனுடன் இருந்துள்ளேன். சிறந்த மனிதர்களுடன் பயணித்தது மிகவும் அற்புதமான ஒரு பயணமாகும். ஆனால் நான் செல்லவேண்டிய நேரம் இது” என கூறியுள்ளார்.
  
ஜான் கோயமின் பதிவிற்கு பதிலளித்துள்ள பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், “வாட்ஸ் ஆப் இணை நிறுவனருடன் ெநருக்கமாக பணியாற்றும் தருணத்தை தவறவிடுகிறேன். நீங்கள் எனக்கு கற்றுக்கொடுத்த அனைத்து விஷயங்களுக்கும் நன்றி. பயனர்களுக்கு மட்டுமே தகவலை கொண்டு சென்று சேர்க்கும் என்கிரிப்சன் முறையை கற்றுக்கொடுத்து அதனை மக்கள் கையில் கொண்டு சேர்த்ததற்காகவும் உங்களுக்கு நன்றி ெதரிவிக்கிறேன். அந்த மதிப்புகள் எப்போதுமே வாட்ஸ் ஆப்பின் இதயத்தில் இருக்கும்” என பதிவிட்டுள்ளார். இதற்கிடையேஐரோப்பிய யூனியன் நாடுகளில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது 16 ஆக உயர்த்தியுள்ளது. 

Label