OUR CLIENTS
எடப்பாடி ஆட்சிக்கு ஆதரவு தரவேண்டும் - சசிகலா சத்தியம்
எடப்பாடி ஆட்சிக்கு ஆதரவு தரவேண்டும் - சசிகலா சத்தியம் Posted on 02-May-2018 எடப்பாடி ஆட்சிக்கு ஆதரவு தரவேண்டும் - சசிகலா சத்தியம்

சென்னை

அதிமுகவை மீட்டு விடுவேன் என்று டிடிவி.தினகரன் கூறுவது முட்டாள்தனம் என ஜெய் ஆனந்த் கூறியுள்ளார்.

யார் காணாமல் போவார்கள் என்பதை காலம் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார். சிறை செல்லும்முன் அதிமுகவை டிடிவி.தினகரன் கையில் கொடுத்துவிட்டு சசிகலா சென்றார். ஆனால் சசிகலா கொடுத்துவிட்டு சென்ற ஆட்சியை டி.டி.வி. காப்பாற்றவில்லை என ஜெய் ஆனந்த் குற்றம்சாட்டியுள்ளார். சக மனிதனுக்கு தரவேண்டிய மரியாதை டிடிவி.யிடம் இல்லை என்பதால் வெளியேறினோம் என்று ஜெய் ஆனந்த் பேட்டியளித்துள்ளார். நடிப்பின் மூலம் நல்ல தலைவர் என்ற பெயரை டிடிவி.தினகரன் எடுத்துள்ளார். 


எடப்பாடி ஆட்சிக்கு ஆதரவு தரவேண்டும் என்று சிறை செல்லும் முன் சசிகலா சத்தியம் வாங்கினார் என்று திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். சசிகலாவுக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளதால் எடப்பாடி ஆட்சியை எதிர்க்க மாட்டோம் என கூறியுள்ளார். தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான ஆட்சி குறைபாடுள்ள ஆட்சிதான் என்று ஜெய் ஆனந்த் பேட்டியளித்துள்ளார். 


அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் தங்களிடம் பேசிக்கொண்டுதான் உள்ளனர். தங்களிடம் இருந்து பிரிந்து சென்றவர்கள் விரைவில் திரும்புவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாங்கள் ஒற்றுமையாகவே இருந்தோம்; தினகரன் தரப்பினர்தான் பிரிவை ஏற்படுத்தினர் என்று திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் கூறியுள்ளார்

Label