OUR CLIENTS
கேப்டன் சுனில் செட்ரிக்கு அர்ஜுனா விருது கால்பந்து கூட்டமைப்பு சார்பில் பரிந்துரை
கேப்டன் சுனில் செட்ரிக்கு அர்ஜுனா விருது கால்பந்து கூட்டமைப்பு சார்பில் பரிந்துரை Posted on 02-May-2018 கேப்டன் சுனில் செட்ரிக்கு அர்ஜுனா விருது கால்பந்து கூட்டமைப்பு சார்பில் பரிந்துரை

ஆஸ்திரேலியா

இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் செட்ரிக்கு அர்ஜுனா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் பரிந்துரை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகளின் தலைமை பயிற்சியாளர்களாக உள்ள முறையே ஜோயர்ட் மரைன், ஹரேந்திரா சிங் உள்ளனர். இனி ஆண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக ஹரேந்திரா சிங்கும், மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக ஜோயர்ட் மரைனும் செயல்படுவார்கள் என்று ஹாக்கி இந்தியா நேற்று அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இரு அணிகளும் பதக்கம் வெல்லத் தவறியதை அடுத்து, இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 இந்திய குத்துச்சண்டை வீரர் நீரஜ் கோயத், ஆசிய அளவில் ஆண்டின் சிறந்த வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெல்ட்டர் வெயிட் பிரிவில் நீரஜ் நடப்பு ஆசிய சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

 குழந்தை பெற்றுக்கொள்வதற்காக டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகியிருந்த நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), தற்போது ஒற்றையர் தரவரிசையில் 449வது இடத்தில் பின்தங்கியுள்ளார். விம்பிள்டன் தொடரில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்ற சாதனையாளரான செரீனாவுக்கு, இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் தொடரில் ரேங்க் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். அது வரை அவர் காத்திருக்க வேண்டும் என்று விம்பிள்டன் நிர்வாகம் அறிவித்துள்ளது. சீடிங்சில் இடம் பெறாவிட்டாலும், வைல்டு கார்டு சிறப்பு அனுமதி பெற்று செரீனா களமிறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

விம்பிள்டன் தொடரின் (2018ம் ஆண்டு) மொத்த பரிசுத் தொகை ₹312 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 7.6 சதவீதம் அதிகமாகும்.

 கால்பந்து விளையாட்டு தொடர்பான எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் இந்த ஆண்டி தலைசிறந்த வீரராக லிவர்பூல் கிளப் அணியின் முகமது சாலா (25 வயது, எகிப்து) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் இந்திய அணி 125 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. தென் ஆப்ரிக்கா (112), ஆஸ்திரேலியா (106), நியூசிலாந்து (102), இங்கிலாந்து (98) அடுத்த இடங்களில் உள்ளன.

 ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவுக்கான உலக தரவரிசையில் இந்திய வீரர் ஷாஷர் ரிஸ்வி முதலிடம் பிடித்துள்ளார்.

Label