OUR CLIENTS
கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் பிஸி - வரைவு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது மத்திய அரசு
கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் பிஸி - வரைவு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது மத்திய அரசு Posted on 03-May-2018 கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் பிஸி - வரைவு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது மத்திய அரசு

டெல்லி
 
காவிரி நீர் பங்கீட்டிற்கான வரைவு அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டுள்ளது. கர்நாடகா தேர்தலை காரணம் காட்டி காவிரி வழக்கில் தற்போது 3-வது முறையாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அவகாசம் கோரியுள்ளது.

பிரதமரும், அமைச்சரும் தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளதால் ஒப்புதல் பெற முடியவில்லை என்று தெரிவித்துள்ளது. வாரியத்திற்கான செயற்பாட்டு வரைவு அறிக்கை பிரதமருக்கு அனுப்பப்பட வேண்டியுள்ளது என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் வரைவு திட்டம் தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 4 டி.எம்.சி. தண்ணீர் தர கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மே மாதத்துக்குள் காவிரியில் 4 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். உத்தரவை செயல்படுத்தாவிட்டால் கர்நாடக அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Label