OUR CLIENTS
மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகையில் 5 சந்தன மரங்கள் திருட்டு : போலீசார் விசாரணை
மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகையில் 5 சந்தன மரங்கள் திருட்டு : போலீசார் விசாரணை Posted on 03-May-2018 மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகையில் 5 சந்தன மரங்கள் திருட்டு : போலீசார் விசாரணை

புனே

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள ஆளுநர் மாளிகையில் 5 சந்தன மரங்கள் வெட்டப்பட்டு திருடப்பட்டுள்ளது. இதுகுறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மகாராஷ்டிர ஆளுநருக்கு என புனேயில் ஒரு மாளிகை உள்ளது. ஆளுநர், குடியரசுத் தலைவர், பிரதமர், மக்களவைத் தலைவர் ஆகியோர் புனேக்கு வரும்போது இங்குத் தங்குவது வழக்கம். 

காவல்நிலையத்தின் அருகிலேயே உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்த 5 சந்தன மரங்களை மர்ம ஆட்கள் வெட்டியெடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து ஆளுநர் மாளிகையின் பணியாளர்கள் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Label