OUR CLIENTS
ராஜஸ்தான் கிழக்கு நகரங்களை சூறையாடிய புழுதிப் புயல் - 22 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தான் கிழக்கு நகரங்களை சூறையாடிய புழுதிப் புயல் - 22 பேர் உயிரிழப்பு Posted on 03-May-2018 ராஜஸ்தான் கிழக்கு நகரங்களை சூறையாடிய புழுதிப் புயல் - 22 பேர் உயிரிழப்பு

ஜெய்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்கு மாவட்டங்களில் நேற்று இரவு வீசிய சக்திவாய்ந்த புழுதி புயலுக்கு 22 பேர் உயிரிழந்துள்ளனர். பரத்பூர், அல்வார், தோல்பூர், ஜூன்ஜூனு, பைகானீர், ஆகிய நகரங்களில் நேற்றிரவு பலத்த இடியுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

மழை ஓய்ந்த சில நிமிடங்களில் இந்தப் பகுதிகளை புழுதிப் புயல் தாக்கத் தொடங்கியது. சாலையில் இருந்த வாகனங்கள், மரங்கள், மின் கம்பங்கள் அனைத்தையும் புழுதிப் புயல் சூறையாடியது. 100க்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் 1000 மேற்பட்ட மின் கம்பங்கள் சூறையாடப்பட்டுள்ளது. 

மின் கம்பங்கள் நிலத்தில் சாய்ந்ததால் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு நகரங்கள் முழுவதும் இருளில் மூழ்கின. இவற்றை சரிசெய்ய குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் ஆகும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனார். ஏராளமான மரங்கள் முறிந்ததுடன், வீடுகளும் பலத்த சேதம் அடைந்ததால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். புழுதிப் புயல் காரணமாக 22 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 

பரத்பூரில் மட்டும் அதிகபட்சமாக 11 பேர் பலியாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புழுதிப் புயல் பாதித்த இடங்களில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் விரைவுபடுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அம்மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே உத்தரவிட்டுள்ளார்.

Label