OUR CLIENTS
காவிரியில் மணல் எடுக்க தடை கோரிய வழக்கு - மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
காவிரியில் மணல் எடுக்க தடை கோரிய வழக்கு - மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் Posted on 03-May-2018 காவிரியில் மணல் எடுக்க தடை கோரிய வழக்கு - மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி

காவிரியில் மணல் எடுக்க தடை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாணிக்கம் எனபவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் 50 ஆண்டுக்கு மணல் அல்ல தடை விதிக்க மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். வரைமுறையின்றி மணல் எடுப்பதாக ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, விதிமுறைகளுக்கு உட்பட்டு மணல் எடுக்க அனுமதி அளித்தது.

உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாணிக்கம் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இதுகுறித்து  மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Label