OUR CLIENTS
விவசாயிகள் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்தி வருகிறது : கர்நாடகாவில் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு
விவசாயிகள் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்தி வருகிறது : கர்நாடகாவில் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு Posted on 03-May-2018 விவசாயிகள் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்தி வருகிறது : கர்நாடகாவில் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு

பெங்களூர்

விவசாயிகள் நலனில் பாஜக தலைமையிலான மத்திய அரசு அக்கறை செலுத்தி வருகிறது என்று கர்நாடகாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி உரையாடி வருகிறார்.

கர்நாடகாவில் வெயிலைக்கூட தாங்கிக்கொள்ளலாம் ஆனால் காங்கிரஸை தாங்கிக்கொள்ள முடியாது என்று தெரிவித்த மோடி, காங்கிரஸ் இல்லாத கர்நாடகாவையே மக்கள் விரும்புகின்றனர் என்று கூறினார். மேலும் வரும் சட்டமன்ற தேர்தல் கர்நாடகாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியதாகும் என்று எடுத்துரைத்தார். 

இதனிடையே நாட்டிற்காக உயிர் தியாகம் செய்யும் ராணுவ வீரர்களை காங்கிரஸ் கட்சி மதிப்பதே இல்லை என்று குற்றம் சாட்டிய அவர், ராணுவ வீரர்கள் சுர்ஜிக்கல் தாக்குதலை முன்னெடுத்த போது அது குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் கட்சி தம்மிடம் ஆதாரங்களை கேட்டதாகவும் தெரிவித்தார். கர்நாடக என்றாலே அதன் பொருள் வீரம் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஆனால் ஃபீல்ட் மார்ஷல் கரியப்பாவையும் மற்றும் ஜெனரல்  திம்மையாவும் காங்கிரஸ் எப்படி நடத்தியது என்பது வரலாற்று ஆதாரமாக உள்ளது என்றும் கூறினார்.

கத்துவ சம்பவத்தை கண்டித்து டெல்லியில் மெழுகுவர்த்திகள் ஏந்தி காங்கிரஸ் ஊர்வலம் போனதாகவும் , அதே நேரம் கரநாட்க மாநில பிடாரில் தலித் சிறுமி சித்திரவதைக்கு ஆளானபோது காங்கிரஸ் கட்சியின் மெழுகுவர்த்திகள் எங்கே போயின என்றும் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார்.  

Label