OUR CLIENTS
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் தலையெடுத்துள்ளது புதிய சர்ச்சை
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் தலையெடுத்துள்ளது புதிய சர்ச்சை Posted on 03-May-2018 65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் தலையெடுத்துள்ளது புதிய சர்ச்சை

டெல்லி

65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை தலையெடுத்துள்ளது.2017ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் கடந்த 13ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. விருது பெற்றவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கி கெளரவிக்கிறார். இதனிடையே தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணிப்பதாக 60க்கும் மேற்பட்டோர் அறிவித்துள்ளனர். 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிலருக்கு மட்டுமே விருது வழங்குவார் என்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர்  1மணி நேரம் மட்டுமே இருப்பார் என்று கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 11 பேருக்கு மட்டுமே விருது வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற 120 பேருக்கு ஸ்மிருதி இரானி விருது வழங்க உள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய திரைப்பட விருதை தராவிடில் அது எங்களுக்கு வேண்டாம் எனக் கூறி விருதுக்கு தேர்வான தமிழகத்தை சேர்ந்தவர்கள் விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.  மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் இருந்து விருதுகளை வாங்க பாகுபலி தயாரிப்பாளர், தமிழ் பட இயக்குநர் செழியன் உள்ளிட்ட 69 பேர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.இந்த அறிவிப்பினை தொடர்ந்து திரைப்பட விழாக்களுக்கான இயக்குநரகத்திற்கு 69 பேர் கடிதம் அனுப்பி உள்ளனர். 

Label