OUR CLIENTS
அமெரிக்காவில் ராணுவ விமானம் விபத்து - 9 பேர் பலி
அமெரிக்காவில் ராணுவ விமானம் விபத்து - 9 பேர் பலி Posted on 03-May-2018 அமெரிக்காவில் ராணுவ விமானம்  விபத்து - 9 பேர் பலி

வாஷிங்டன்

அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் ஜார்ஜியா நகரில் நேற்று ராணுவ வீரர்கள் விமான பயிற்சி மேற்கொண்டுடிருந்தனர் கொண்டிருந்தனர். ஹெர்குலஸ் என்ற சி-130 ரக விமானத்தில் 9 ராணுவ வீரர்கள் பயணம் செய்தனர். காலை 11:30 மணியளவில் சாவன்னா விமான நிலையம் அருகில் அந்த விமான சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 9 ராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சமீப காலமாக அமெரிக்காவில் ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் ஏற்பட்ட ராணுவ விமான விபத்துகளில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Label