OUR CLIENTS
இந்தியாவுடன் எல்லை பிரச்னைக்கு தீர்வு காண ராணுவ தலைமையகம் இடையே ‘ஹாட்லைன்’ - சீன அரசு முடிவு
இந்தியாவுடன் எல்லை பிரச்னைக்கு தீர்வு காண ராணுவ தலைமையகம் இடையே ‘ஹாட்லைன்’ - சீன அரசு முடிவு Posted on 03-May-2018 இந்தியாவுடன் எல்லை பிரச்னைக்கு தீர்வு காண ராணுவ தலைமையகம் இடையே ‘ஹாட்லைன்’ - சீன அரசு முடிவு

பீஜிங்

இந்தியா - சீனா இடையே எல்லையில் பிரச்னை ஏற்படுவதை தடுக்க, இருநாட்டு ராணுவ தலைமையகம் இடையே ‘ஹாட்லைன்’ வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் மனம் திறந்த பேச்சுவார்த்தையை நடத்தினார். இந்த சந்திப்பு, ‘இதயங்களின் சந்திப்பு’ என்று அழைக்கப்பட்டது. இருநாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னை உட்பட பல்வேறு பிரச்னைகள் பற்றி இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இருநாடுகளுக்கும் இடையே எல்லையில் அடிக்கடி மோதல்கள் ஏற்படுவதை தடுப்பதற்காக, ‘ஹைட்லைன்’ தொலைபேசி வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. கடந்தாண்டு டோக்லாமில் இந்திய - சீன ராணுவங்களுக்கு இடையே 73 நாட்கள் நேரடி மோதல் ஏற்பட்டது போல், எதிர்காலத்தில் இருநாட்டு எல்லையில் பிரச்னை ஏற்படும் பட்சத்தில், அது பற்றி உடனடியாக தகவல் பரிமாற்றம் செய்து தீர்வு காண்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஹாட்லைன் வசதியை எந்த மட்டத்தில் ஏற்படுத்துவது என்பது பற்றி சீனா முடிவு செய்யாமல் இருந்தது. 

உதாரணமாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையில் ஏற்படும் பிரச்னைகளை பற்றி பேசுவதற்காக இருநாட்டு ராணுவத்திலும் ‘ராணுவ நடவடிக்கை இயக்குனர் ஜெனரல்’கள் இடையே இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இதேபோல், இந்தியா- சீனா இடையே ராணுவ தலைமையகங்களுக்கு இடையே ஹாட்லைன் வசதியை ஏற்படுத்த சீனா முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருநாடுகளுக்கும் இடையே ஹாட்லைன் வசதியை ஏற்படுத்துவது பற்றி கடந்த 2013ம் ஆண்டில் கையெழுத்தான, ‘எல்லை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒத்துழைப்பு’ ஒப்பந்தத்திலேயே முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த வசதியை தனது ராணுவத்தின் எந்த மட்டத்தில் அமைப்பது என்பதை முடிவு செய்யாமல் சீனா நீண்ட காலமாக குழப்பத்தில் இருந்தது. மோடியின் பயணத்தின் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, ராணுவ தலைமையகங்கள் இடையே இந்த வசதியை ஏற்படுத்தும் முடிவுக்கு சீன அரசு வந்துள்ளது. 

Label