OUR CLIENTS
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி - இந்திய மகளிர் அணிக்கு சுனிதா லாக்ரா கேப்டன்
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி - இந்திய மகளிர் அணிக்கு சுனிதா லாக்ரா கேப்டன் Posted on 03-May-2018 ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி - இந்திய மகளிர் அணிக்கு சுனிதா லாக்ரா கேப்டன்

புதுடெல்லி

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான இந்திய மகளிர் அணி கேப்டனாக, அனுபவ வீராங்கனை சுனிதா லாக்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

கொரியாவின் டாங்கே நகரில் மே 13ம் தேதி தொடங்க உள்ள இந்த தொடரில், நடப்பு சாம்பியனான இந்திய அணியின் கேப்டன் ராணி ராம்பாலுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக சுனிதா லாக்ராவிடம் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கோல் கீப்பர் சவிதா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். லாக்ரா தலைமையிலான இந்திய அணியில் மொத்தம் 18 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அரை இறுதிக்கு தகுதி பெற்று 4வது இடம் பிடித்த இந்திய அணி, ஆசிய தொடரில் சிறப்பாக விளையாடி தொடர்ந்து 3வது முறையாக கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2016, 2017 பைனலில் சீன அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. கோல் கீப்பர்கள்: சவிதா, ஸ்வாதி. தற்காப்பு: தீபிகா, சுனிதா லாக்ரா (கேப்டன்), தீப் கிரேஸ் எக்கா, குர்ஜித் கவுர், சுமன் தேவி தோடம். நடுகளம்: மோனிகா, நமிதா டோப்போ, நிக்கி பிரதான், நேஹா கோயல், லீலிமா மின்ஸ், நவ்ஜோத் கவுர், உதிதா. முன்களம்: வந்தனா கட்டாரியா, லால்ரேம்சியாமி, நவ்னீத் கவுர், அனுபா பாரியா.

Label