OUR CLIENTS
மாமூல் பெற்றுக்கொண்டு குட்காவை விற்க அனுமதி தந்தவர் சி.விஜயபாஸ்கர் - மு.க. ஸ்டாலின்
மாமூல் பெற்றுக்கொண்டு குட்காவை விற்க அனுமதி தந்தவர் சி.விஜயபாஸ்கர் - மு.க. ஸ்டாலின் Posted on 04-May-2018 மாமூல் பெற்றுக்கொண்டு குட்காவை விற்க அனுமதி தந்தவர் சி.விஜயபாஸ்கர் - மு.க. ஸ்டாலின்

கோவை

கோவை செஞ்சிலுவை சங்கம் முன் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குட்கா விவகாரத்தில் போராட்டம் நடத்திய திமுக நிர்வாகிகள் கைது செய்ததை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுட்டுள்ளனர். குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகளை கைது செய்ய திமுகவினர் வலியுறுத்தினர். மேலும் ஜனநாயக முரையில் போராடிய திமுகவினர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், கைது நடவடிக்கையை கண்டு அடங்கி ஒடுங்கிவிட மாட்டோம் என்று கூறினார். கோவை எஸ்.பி. மூர்த்தி, ஆளுங்கட்சியினர் ஆணைக்கு கட்டுப்பட்டு நடக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்தால், பதில் சொல்லியே தீர வேண்டும் என்றும் மு.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னையில் குட்கா ஆலை சோதனையில் ரூ.250 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டது. குட்கா டைரியில், யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் தரப்பட்டது என்பது தெளிவாக உள்ளது என்று கூறினார்.  நல்வாழ்வுக்கான அமைச்சர் விஜயபாஸ்கர் புற்றுநோயை ஏற்படுத்தும் குட்காவுக்கு அனுமதி தருவதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மாமூல் பெற்றுக்கொண்டு குட்காவை சுதந்திரமாக விற்க அனுமதி தந்தவர் சி.விஜயபாஸ்கர் என்று தெரிவித்துள்ளார். 

Label