OUR CLIENTS
தாலிக்கு தங்கம் போன்ற திட்டங்களுக்கு ஜெயலலிதாவுக்கு நான் ஐடியா கொடுத்தேன் - திவாகரன்
தாலிக்கு தங்கம் போன்ற திட்டங்களுக்கு ஜெயலலிதாவுக்கு நான் ஐடியா கொடுத்தேன் - திவாகரன் Posted on 04-May-2018 தாலிக்கு தங்கம் போன்ற திட்டங்களுக்கு ஜெயலலிதாவுக்கு நான் ஐடியா கொடுத்தேன் - திவாகரன்

சென்னை

நான் கூறியதால்தான், தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா செயல்படுத்தினார் என திவாகரன், செய்தியாளர்களிடம் கூறினார்.எண்ணூர் அருகே கடற்கரையில் 2 கப்பல்கள் மோதி விபத்து ஏற்பட்டது.

இதனால், அதில் இருந்து வெளியேறிய ஆயில்களால், மீனவ மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசு சார்பில் நிவாரணம் வழங்க கோரி, மீனவ சங்க தலைவர் செல்வராஜ்குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் வெற்றி பெற்று, நிவாரணமும் பெற்று தந்தார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு, அரசு சார்பில் நிவாரணம் பெற்று தந்த செல்வராஜ்குமாரை, ராயபுரம் மேற்கு மாதா கோயில் தெருவில் உள்ள அவரது அலுவலகத்தில், சசிகலாவின் சகோதரர் திவாகரன், நேற்று மாலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் திவாகரன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு வெற்றிவேல், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிடியை வெளியிட்டது தவறு. 

இதை அறிந்ததும் சிறையில் உள்ள எனது சகோதரி சசிகலா, தலையில் அடித்து கொண்டார். புதிய வீராணம் திட்டம் கொண்டு வரும்போது, 10 மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவதாக சசிகலாவிடம் கூறி, அந்த திட்டத்தை ஜெயலலிதாவிடம் தெரிவித்து, நிறுத்தும்படி கூறினேன். தமிழகம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு திட்டம் மற்றும் தாலிக்கு தங்கம் ஆகிய திட்டங்களை நான் கூறியதால்தான், ஜெயலலிதா செயல்படுத்தினார். இறந்த நடராஜன் கூறியதால், விவசாயிகளுக்கு இலவச கறவை மாடு, ஆடுகள், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டமும் ஜெயலலிதா கொண்டு வந்தார்.  1987ம் ஆண்டு ஜெயலலிதாவுடன் இருந்து, பாதுகாப்பாக செயல்பட்டேன். அதனால், ஜெயலலிதா மீது விழ வேண்டிய 14 தடியடிகள்  என் மீது விழுந்தது. அதையெல்லாம் தாண்டி நான், அரசியலில் செயல்பட்டு வருகிறேன். இன்று முதல் அம்மா அணியின் சுற்று பயணம், ராயபுரத்தில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இந்த சுற்று பயணம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். 

Label