OUR CLIENTS
அனகாபுத்தூர் தோல் தொழிற்சாலை கழிவுநீரால் மாசுபடும் ஆறு - கமலின் விசில் ஆப்பில் புகார்:-
அனகாபுத்தூர் தோல் தொழிற்சாலை கழிவுநீரால் மாசுபடும் ஆறு - கமலின் விசில் ஆப்பில் புகார்:- Posted on 04-May-2018 அனகாபுத்தூர் தோல் தொழிற்சாலை கழிவுநீரால் மாசுபடும் ஆறு - கமலின் விசில் ஆப்பில் புகார்:-

சென்னை

பொது மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்னைகள், அன்றாடம் சந்திக்கும் சமூக அவலங்களை விசில் என்ற மொபைல் ஆப்பில் புகாராக அளிக்கலாம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார்.

இந்நிலையில் விசில் ஆப்பில் கூறப்பட்டுள்ள புகார் குறித்து கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் நேற்று வௌியான பதிவு:அனகாபுத்தூரில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் அங்கிருக்கும்  ஆற்றில் கலந்து நீர் மாசு ஏற்படுத்துகிறது என்று மய்யம் விசில் செயலியில்  பதிவு செய்யப்பட்டுள்ளது. இதோ ஒலிக்காக....  அது எப்படி கேக்காம போகும்? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து கமல் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு:

மக்கள் நீதி மய்யம் பெருமளவு வேலை வாய்ப்புகள் வழங்கி தொழிற்சாலைகளுக்கு எதிரானது அல்ல. ஆனால், வணிகம் மாற்றும் வேலை வாய்ப்பின் பெயரில் நிகழும் கொடுமையான மாசுகளுக்கு எதிரானது. அரசு இது போன்ற பொறுப்பற்ற மாசுக்கள் ஏற்படுவதை தடுப்பதற்கான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும். அனகாபுத்தூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை தேவை! தொழில்கள் மெல்லச் சாகக்கூடாது.. மக்களும் தான்!இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Label