OUR CLIENTS
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் அறிக்கை வெளியீடு - காவிரி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் அறிக்கை வெளியீடு - காவிரி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை Posted on 04-May-2018 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் அறிக்கை வெளியீடு - காவிரி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை

பெங்களூரு

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.இதனைத் தொடர்ந்து பாஜக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் கர்நாடக பாஜக தேர்தல் அறிக்கையை எடியூரப்பா வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவரும், பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளருமான எடியூரப்பா, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.இந்த தேர்தல் அறிக்கையில் விவசாயத்திற்கும், கல்வி வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் அம்மா உணவகம் போல, கர்நாடகாவில் அன்னபூர்ணா உணவகம் திறக்கப்படும் என்று கர்நாடக பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையில் காவிரி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. காங்கிரஸ் கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் காவிரி விவகாரம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.மேலும் வறுமை கோட்டின் கீழ் உள்ள மாணவர்களுக்கு  வட்டியில்லா கல்வி கடன் வழங்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு இலவச ஸ்மார்ட்போன், மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் நீர்பாசனத்துறை வளர்ச்சி திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே கர்நாடகாவின் ஜெயாநகர் சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் பி.என். விஜயகுமார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து அத்தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டுக்குள் அனைவரும் 100% மின்வசதி வழங்கப்படும் என்றும் பெருமளவில் அணைகள் கட்டப்படும் என்றும் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

Label