OUR CLIENTS
மராட்டிய மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மீண்டும் போராட்டம்!
மராட்டிய மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மீண்டும் போராட்டம்! Posted on 04-May-2018 மராட்டிய மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மீண்டும் போராட்டம்!

மும்பை

மராட்டிய மாநிலத்தில் 15,000 விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பயிர் கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தின் போது சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் நாசிக் மாவட்டத்தில் இருந்து 6 நாட்கள் நடைப்பயணமாக 180 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மும்பைக்கு பேரணியாக சென்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் 12 பேரிடன் அரசு அமைத்த 6 அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். 

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு இன்னும் இரண்டு மாதத்தில் தீர்வு காணப்படும் என்று எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க அரசு சம்மதம் தெரிவித்ததையடுத்து விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து இதுவரையில், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மராட்டிய மாநிலத்தில் 15,000 விவசாயிகள் மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பயிர்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர். 

Label