OUR CLIENTS
அமர்நாத் கோவிலில் உருவானது பனி லிங்கம் : யாத்திரை ஜூன் 28-ம் தேதி துவங்குகிறது
அமர்நாத் கோவிலில் உருவானது பனி லிங்கம் : யாத்திரை ஜூன் 28-ம் தேதி துவங்குகிறது Posted on 04-May-2018 அமர்நாத் கோவிலில் உருவானது பனி லிங்கம் : யாத்திரை ஜூன் 28-ம் தேதி துவங்குகிறது

மர்நாத்

ஜம்மு -காஷ்மீர் மாநிலம் அமர்நாத் கோவிலில் இந்த ஆண்டில் முதல்முறையாக பனி லிங்கம் உருவாகியுள்ளது.

அமர்நாத் கோவிலின் மேற்கூரையில் இருந்து விழும் தண்ணீர் கடும் குளிரின் காரணமாக உறைந்து சிவ லிங்கம் போன்று காட்சியளிக்கிறது. இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் பனி லிங்க காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த யாத்திரையானது 60 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. ஒரு நாளைக்கு 1500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பாக, ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி பக்தர்களின் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடுமுழுவதிலும் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி, யெஸ் வங்கி மற்றும் ஜம்மு-காஷ்மீர் வங்கி ஆகியவற்றின் கிளைகளில் யாத்திரைக்கான முன்பதிவு நடைபெற்றது. இதுவரை நாடு முழுவதிலும் ஒரு லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். பனி புயலால் சேதமடைந்த அமர்நாத் கோவிலுக்கு செல்லும் பாதையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Label