OUR CLIENTS
வீட்டோ அதிகாரம் துஷ்பிரயோகம் சீனாவுக்கு எதிராக இந்திய தூதர் பேச்சு
வீட்டோ அதிகாரம் துஷ்பிரயோகம் சீனாவுக்கு எதிராக இந்திய தூதர் பேச்சு Posted on 04-May-2018 வீட்டோ அதிகாரம் துஷ்பிரயோகம் சீனாவுக்கு எதிராக இந்திய தூதர் பேச்சு

ஐநா

ஐநா சபையில் வீட்டோ அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து இந்திய தூதர் பேசிய பேச்சில் சீனாவை அவர் மறைமுகமாக சாடினார்.

இதனால் ஐநா சபையில் பரபரப்பு எழுந்தது. ஐநா சபையில் மாதாந்திர கூட்டத்தில் வீட்டோ அதிகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் ஐந்து நாடுகளுக்கு மட்டுமே இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரம் மூலம் ஐநா.வில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்த நாடுகள் நிராகரித்து விட முடியும். பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐநாவில் அறிவிக்க உலக நாடுகள் அனைத்தும் ஒத்துக்கொண்ட நிலையில் சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானத்தை தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இந்நிலையில், வீட்டோ அதிகாரம் குறித்து இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியும் ஐநா தூதருமான சையத் அக்பருதீன் பேசியதாவது: ஐநா சபையில் உள்ள நாடுகளின் பிரதிநிதித்துவத்தை அங்கீகரிக்க வேண்டும். அதற்கு உரிய அதிகாரம் வழங்க வேண்டும். 

வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி உறுப்பு நாடுகளின் அதிகாரத்தை பறிப்பதை ஐநா தலைமை ஆய்வு செய்ய வேண்டும். அதனுடைய பாதிப்புகளைப் பற்றி விரிவாக அலசி ஆராய வேண்டிய நேரம் இது. இந்த நேரத்தில் வீட்டோ அதிகாரம் பற்றி விரிவாக விவாதம் நடத்த நாங்கள் விரும்புகிறோம். அந்த அதிகாரத்தில் என்ன மறைந்திருக்கிறது என்பதை அனைவரும் அறிய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர் நாடுகள் பட்டியலை இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை விரிவுபடுத்துவது பற்றி பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அவரது பேச்சில் எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடாவிட்டாலும், தீவிரவாதி மசூத் அசாருக்கு எதிராக ஒவ்வொரு முறையும் தீர்மானம் கொண்டு வரும் போதும் அதை வீட்டோ மூலம் நிராகரிக்கும் சீனாவை மறைமுகமாக தாக்கினார்.

Label