OUR CLIENTS
நாடு முழுவதிலும் இன்று நீட் தேர்வு
நாடு முழுவதிலும் இன்று நீட் தேர்வு Posted on 06-May-2018 நாடு முழுவதிலும் இன்று  நீட் தேர்வு


நாடு முழுவதிலும் இன்று நடைபெறும் நீட் தேர்வை 13.26 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தமிழகத்தில் 170 மையங்களில் 1,07,288 மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எழுதுகின்றனர்.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற உள்ளது.  மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் இந்தத் தேர்வுக்கு நாடு முழுவதும் சுமார் 13 லட்சத்து 26,725 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் 1 லட்சத்து 7,288 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். 

நாடு முழுவதும், 136 நகரங்களில், 2,255 தேர்வு மையங்களில், 13.27 லட்சம் பேர், நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 7.46 லட்சம் மாணவியர்; ஒருவர் திருநங்கை. வெளிநாடு வாழ் தமிழர்கள் 1,842 பேரும், இந்த தேர்வில் பங்கேற்கின்றனர். பெரும்பாலும் சிபிஎஸ்இ பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமையப் பெற்றுள்ளன.

வெளிமாநிலங்களுக்குச் செல்லும் தமிழக மாணவர்கள்: தமிழகத்திலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேரளம், கர்நாடகம், ஆந்திரம், ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இன்று காலை, 10:00 மணிக்கு துவங்கி, மதியம், 1:00 மணிக்கு தேர்வு முடியும். காலை, 9:30 மணிக்கு மேல், தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்கள், உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.மாணவர்கள், ஹால் டிக்கெட், வண்ண புகைப்படத்தை மட்டுமே, தேர்வு மையத்துக்கு எடுத்து வர வேண்டும். தண்ணீர் பாட்டில் உள்பட, வேறு எந்த பொருட்களும் அனுமதியில்லை.முழு கை சட்டை அணிய கூடாது; தலையில் பூ வைக்க கூடாது; ஆபரணங்கள் அணியக் கூடாது; காது வளையம், ஜிமிக்கி, மூக்குத்தி, வாட்ச் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டு உள்ளன. இந்த கட்டுப்பாடுகளால், மாணவ, மாணவியர் கலக்கம் அடைந்துள்ளனர்.

Label