OUR CLIENTS
நீட் தேர்வு எழுத கேரளாவிற்கு மகனை அழைத்துச் சென்ற தந்தை மரணம்
நீட் தேர்வு எழுத கேரளாவிற்கு மகனை அழைத்துச் சென்ற தந்தை மரணம் Posted on 06-May-2018 நீட் தேர்வு எழுத கேரளாவிற்கு மகனை அழைத்துச் சென்ற தந்தை மரணம்

எர்ணாகுளம்

நீட் தேர்வு எழுத மகனை கேரளா மாநிலம் எர்ணாகுளத்திற்கு அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி என்பவர் மரணமடைந்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி விளக்குடியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் மகன் கஸ்தூரி மகாலிங்கத்திற்கு கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே சம்மணம் என்ற இடத்தில் ப்பளிக் பள்ளியில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்ததது. இதனையடுத்து இன்று காலை நீட் எழுத கஸ்தூரி மகாலிங்கத்தை தந்தை எர்ணாகுளம் அழைத்து வந்துள்ளார். 

மாணவன் தேர்வு மையத்திற்குள் சென்றபின் திடீர் மாரடைப்பு காரணமாக தந்தை கிருஷ்ணசாமி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த கிருஷ்ணசாமி உடல் எர்ணாகுளம் சிட்டி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நூலகத்தில் பணியாற்றிய கிருஷ்ணசாமி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக எர்ணாகுளம் ஆட்சியர் சபருல்லா தகவல் தெரிவித்துள்ளார். தந்தை உயிரிழந்தது தெரியாமல் மகன் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வு எழுதி வருவது குறிப்பிடத்தக்கது. 

தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் ஒதுக்கப்படாததற்கு பெற்றோர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நீட் தேர்வு மையத்தை கண்டுபிடிக்க பெற்றோர்கள் மனஉளைச்சல் அடைந்துள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணசாமி மன அழுத்தம் ஏற்பட்டு மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணசாமி மரணத்துக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். 

Label