OUR CLIENTS
ஏர் இந்தியா பங்குகளை விற்கத் தவறினால் நிறுவனத்தை மூட நேரிடும்- விமானப் போக்குவரத்து மையம் எச்சரிக்கை
ஏர் இந்தியா பங்குகளை விற்கத் தவறினால் நிறுவனத்தை மூட நேரிடும்- விமானப் போக்குவரத்து மையம் எச்சரிக்கை Posted on 06-May-2018 ஏர் இந்தியா பங்குகளை விற்கத் தவறினால் நிறுவனத்தை மூட நேரிடும்- விமானப் போக்குவரத்து மையம் எச்சரிக்கை

டெல்லி

ஏர் இந்தியா பங்குகளை விரைந்து விற்கத் தவறினால், நிறுவனத்தை மூட நேரிடும் என காப்பா எனப்படும் ஆசிய பசிபிக் பிராந்திய விமானப் போக்குவரத்து மையம் எச்சரித்தள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏர் இந்திய நிறுவனத்தில் கூடுதலாக 200 கோடி வரை இழப்பீடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏர் இந்தியா விமான நிறுவன பங்குகளை வாங்குவோர், பலஆண்டுகளாக சந்தித்து வரும் இழப்புகளை ஈடுகட்டுவோராகவும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியி்ல் சிக்கியுள்ள ஏர் இந்திய நிறுவனத்தின் 76 சதவீத பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யபடும் என மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Label