OUR CLIENTS
காவிரி வழக்கு நாளை விசாரணை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு நிலவர அறிக்கை தாக்கல்
காவிரி வழக்கு நாளை விசாரணை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு நிலவர அறிக்கை தாக்கல் Posted on 07-May-2018 காவிரி வழக்கு நாளை விசாரணை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு நிலவர அறிக்கை தாக்கல்

டெல்லி

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நிலவர அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. கடந்த 3ம் தேதி காவிரி நீர் பங்கீட்டிற்கான வரைவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கடந்த 2ம் தேதி வரைவு திட்டம் தாக்கல் செய்ய மேலும் 2 வார கால அவகாசம் கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. இடைக்கால மனுவில் மே 16-ம் தேதி வரை கால அவகாசம் கேட்டும், மனுவை இன்றே விசாரிக்கவும் கோரிக்கை விடுத்தது. இடைக்கால மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம் வரைவு திட்டம் தொடர்பான மனுவோடு, மத்திய அரசின் இடைக்கால மனுவும் மே 3ம் விசாரிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் 3ம் தேதி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் வரைவுத் திட்டம் குறித்து கேட்டபோது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளதால் வரைவுத் திட்டத்தில் ஒப்புதல் பெற முடியவில்லை, காவிரி மேலாண்மை வாரியத்திற்கான செயற்பாட்டு வரைவு அறிக்கை பிரதமருக்கு அனுப்பப்பட வேண்டியுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தகவல் தெரிவித்தார்.

மேலும் வரைவு திட்டம் தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 2 வார கால அவகாசம் வேண்டும் என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனையடுத்து மத்திய அரசை கண்டித்த உச்சநீதிமன்ற நீதிபதி வரைவுத் திட்டத்தை மே 8ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து  வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் காவரி நீர்ப் பங்கீட்டு வரைவுத் திட்டம் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றி மத்திய அரசு இன்றே மனு தாக்கல் செய்துள்ளது. 

Label