OUR CLIENTS
கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - பதான் கோட் நீதிமன்றத்திற்கு மாற்றம்
கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - பதான் கோட் நீதிமன்றத்திற்கு மாற்றம் Posted on 07-May-2018 கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - பதான் கோட் நீதிமன்றத்திற்கு மாற்றம்

பதான் கோட்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவாவில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு பஞ்சாப் மாநிலம் பதான் கோட் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் சிறுமியை கற்பழித்த சிறுவன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். காஷ்மீர் மாநிலத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சிறுமியின் தந்தை விசாரணையை சண்டிகர் நீதிமன்றத்திக்கு மாற்றுமாறு நீதிமன்றத்தில் முறையிட்டார். 

இதை விசாரித்த நீதிபதிகள் பதான் கோட் நீதிமன்றத்திக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டனர். விரைவாக வழக்கை முடிப்பதுடன் கேமரா மூலம் விசாரணை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாள்தோறும் வழக்கு நடத்திட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் அடுத்த கட்ட விசாரணையை ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Label