OUR CLIENTS
அரசியலில் வன்முறை ஒரு அங்கம் - மோடி
அரசியலில் வன்முறை ஒரு அங்கம் - மோடி Posted on 08-May-2018 அரசியலில் வன்முறை ஒரு அங்கம் - மோடி

புதுடெல்லி, மே 8-

கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டிவரும் நிலையில் கர்நாடக பா.ஜ., நிர்வாகிகளிடம் நமோ ஆப் மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர், தேர்தலில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதை கர்நாடக தேர்தலில் நான் காண்கிறேன். அனைத்து இடங்களிலும் கர்நாடக இளைஞர்கள் தங்களின் திறமையை நிரூபித்து வருகிறார்கள். கட்சி தொண்டர்கள் அடிமட்டத்தில் இருந்து மக்களுக்காக உழைத்து வருவது பா.ஜ.,வுக்கு அதிர்ஷ்டம். 

கர்நாடகாவில் பா.ஜ., வெற்றி பெற்ற பிறகு கர்நாடகாவில் 60 இடங்களில் நம்ம பிபிஓ காம்ப்ளக்ஸ்கள் உருவாக்கப்படும். உலக தரத்திலான 5 விளையாட்டு மையங்கள் கர்நாடகாவில் அமைக்கப்படும். இந்தியாவின் நேரடி அன்னிய முதலீடு உச்சநிலையை அடைந்துள்ளது. இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 
ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடமில்லை என்பதால் அதை நிறுத்த வேண்டும். பேச்சு வார்த்தையில் நம்பிக்கை யில்லாதவர்கள் தான் வன்முறை அரசியல் பாதையை தேர்ந் தெடுக்கின்றனர். பல மாநலங்களில் பா.ஜ., நிர்வாகிகள் கொல்லப்படுவது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல. இந்திரா படுகொலைக்கு பிறகு அரசியலில் வன்முறை ஒரு அங்கமாகி விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

Label