OUR CLIENTS
மோடி அரசின் தவறுகளை பட்டியலிட்ட மன்மோகன் சிங்
மோடி அரசின் தவறுகளை பட்டியலிட்ட மன்மோகன் சிங் Posted on 08-May-2018 மோடி அரசின் தவறுகளை பட்டியலிட்ட மன்மோகன் சிங்

பெங்களூரு, மே 8-

மோடி அரசின் பொருளாதார மேலாண்மை, வங்கி செயல்பாடு மீதான பொது மக்களின் நம்பிக்கை இழந்து வருகிறது.
 
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். சமீப காலமாக பல மாநிலங்களில் ஏற்பட்டு வரும் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு தடுக்கப்பட வேண்டியதாகும். மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகிய இரண்டும் மோடி அரசு தவிர்த்திருக்க வேண்டிய மிகப் பெரிய தவறுகள். இந்த இரு தவறுகளால் பொருளாதாரத்தில் கடுமையான இழப்பும், பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. நமது சிறு, குறு உற்பத்தியாளர்கள், தொழில்முனைவோரை கடுமையாக பாதித்துள்ளனர் என்றும், ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர் என்றும் மன்மோகன் சிங் கூறியுள்ளார். 

Label