OUR CLIENTS
காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் பதற்றமான இடங்களில் ராணுவம் குவிப்பு
காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் பதற்றமான இடங்களில் ராணுவம் குவிப்பு Posted on 08-May-2018 காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் பதற்றமான இடங்களில் ராணுவம் குவிப்பு

காஷ்மீர், மே 8-

காஷ்மீரில் ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்துள்ளதை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஷோபியான், புல்மாவா பகுதிகளில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ஒருவரான முகமது ராபி பட் என்பவர் காஷ்மீர் பல்கலைக்கழக பேராசிரியர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் ஒருவரும் காயமடைந்தார். 

இந்த மோதலைக் கண்டித்து இளைஞர்களும், அப்பகுதி பொதுமக்களும் போரட்டம் நடத்தினர். அப்போது வன்முறை வெடித்ததில் 5 பொதுமக்கள் உயிரிழந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகள் மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் பல்கலைக்கழகத்திற்கு நேற்றும், இன்றும்,  விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. காஷ்மீரில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. கடைகள், பெட்ரோல் நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. மேலும் பேருந்துகள் இயங்காததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. பதற்றமான இடங்களில் பாதுகாப்பு கருதி ராணுவவீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

Label