OUR CLIENTS
நியூட்ரினோ திட்டம் எதிர்த்து பேசமுடியாமல் வாய் மூடி இருக்கும் இபிஎஸ்-ஓபிஎஸ்
நியூட்ரினோ திட்டம் எதிர்த்து பேசமுடியாமல் வாய் மூடி இருக்கும் இபிஎஸ்-ஓபிஎஸ் Posted on 08-May-2018 நியூட்ரினோ திட்டம்  எதிர்த்து பேசமுடியாமல் வாய் மூடி இருக்கும் இபிஎஸ்-ஓபிஎஸ்

உத்தமபாளையம், மே 8-

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து பேசமுடியாமல் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வாய் மூடி இருப்பதாக டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டினார். 

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், பொட்டிப்புரம் அருகே டி.ராமகிருஷ்ணாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கி பேசினார்.  அவர் பேசியதாவது:- அமெரிக்காவில் பெர்மி நியூட்ரினோ ஆய்வகத்தில் இருந்து செயற்கை நியூட்ரினோ கதிர்களை பெற்று, பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில் ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து தினமும் 12 லட்சம் லிட்டருக்கு மேல் தண்ணீர் எடுக்கப்படும்.  லட்சக்கணக்கான ஜெலட்டின் குச்சிகளும், பல நூறு டன் கரிமருந்துகளும், பாறைகளை தகர்க்க பயன்படுத்தும்போது ஏற்படும் அதிர்ச்சியால் பென்னிகுவிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணை, கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி அணையும் விரிசல் ஏற்பட்டு வலுவிழக்கும் அபாயம் ஏற்படும். அத்துடன் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள மேகமலை, மணலாறு, வெண்ணியாறு மற்றும் வைகை அணை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அணைகளும் பாதிக்கப்படும்.  இந்த திட்டத்தை வரவேற்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசி வருகிறார்.

இந்த மாவட்டத்தில் தான் உங்கள் குடும்பம் மற்றும் வம்சாவளிகள் உள்ளது.  இதற்கு அனுமதி கொடுத்தால் எல்லாம் அழிந்துபோகும்.  மத்திய அரசை எதிர்க்க துணிவு இல்லாமல் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கைகட்டி, வாய்மூடி இருக்கின்றனர். இந்த அரசால் மக்களுக்கும், விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் எந்தவித பயனும் இல்லை.  நிம்மதியும் இல்லை.  நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதியை விவசாயத்துக்கு ஒதுக்கினால் விவசாயம் சிறப்பு அடையும்.  என்னை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தேனி மாவட்டத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.  இதன்காரணமாக தேனியை என்தாய் பூமியாக நேசிக்கிறேன். மக்கள் விரும்பாத நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஸ்டெர்லைட் உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றினால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.  நான் பிறந்த தஞ்சையில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டத்தால் இன்றைக்கு கடுமையாக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார் கட்சியில் தினகரன் கைப்பிள்ளை என்று.  என்னை ஜெயலலிதா 1991-ம் ஆண்டு தேனியில் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது தங்க தமிழ்செல்வன் ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்தார்.
அப்போது ஜெயலலிதாவுடன் தங்கத்தமிழ்செல்வனுக்கு அறிமுகம் இருந்தது.  ஆனால் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் நகர செயலாளராக இருந்தார் என்பது இங்குள்ள மக்களுக்கு அனைவருக்கும் தெரியும்.  யாரால் முதலமைச்சர் பதவிக்கு சென்றார் என்றும் தெரியும். அதை எல்லாம் விட்டுவிட்டு மக்களை ஏமாற்றும் விதமாக பேசி வருகிறார். இப்போது தமிழகத்தில் மீனவர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், மாணவர்கள் யாருக்கும் நிம்மதி இல்லை.  இதனை போக்க விரைவில் ஜெயலலிதாவின் ஆட்சி, எம்.ஜி.ஆரின் ஆட்சியை அமைப்போம் என்றார்.  இவ்வாறு அவர் பேசினார்.

Label