OUR CLIENTS
துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை
துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை Posted on 08-May-2018 துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை

திருவாரூர், மே 8-

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் பட்டப்பகலில் நுழைந்த கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் 6 லட்ச ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். 

அசேஷம் ஊராட்சியில் இயங்கிவரும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக்குள் மதியம் 3 மணியளவில் முகமூடி அணிந்தவாறு நுழைந்த கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி பணத்தை கொள்ளையடித்தனர்.
முன்னதாக வங்கிக்குள் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடங்கிய கருவியை துண்டித்து எடுத்துக்கொண்ட அவர்கள், துப்பாக்கி உண்மையானது என நிரூபிக்க தரையை நோக்கி சுட்டதாகவும் கூறப்படுகிறது. 6 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் மூன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துக் கொண்டு காரில் ஏறி அவர்கள் தப்பிச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், வங்கி ஊழியர்களிடமும் வாடிக்கையாளர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Label