OUR CLIENTS
அரசியல் பிரவேசம் நடிகர் விஜய் ஆயத்தம்!
அரசியல் பிரவேசம் நடிகர் விஜய் ஆயத்தம்! Posted on 08-May-2018 அரசியல் பிரவேசம் நடிகர் விஜய் ஆயத்தம்!

வேலூர், மே 8-

தமிழகம் முழுவதும், ‘பூத் கமிட்டி’ உறுப்பினர்களை நியமிக்க, நடிகர் விஜய் மக்கள் இயக்கம் திட்டமிட்டுள்ளது. ஜூன் 22ல், தன் பிறந்த நாளன்று, அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்பை, விஜய் வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு, அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வரும், 2021ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை ஒட்டி, விஜய் மக்கள் இயக்கத்தை, அரசியல் கட்சியாக மாற்ற விஜய் திட்டமிட்டுள்ளார். எனவே, ரஜினி பாணியில், பூத் கமிட்டி நிர்வாகிகளை, மாவட்ட வாரியாக நியமிக்கும் பணிகளை, தற்போது, விஜய் முடுக்கி விட்டுஉள்ளார். காஞ்சிபுரம், விருதுநகர் உள்ளிட்ட சில மாவட்டங்களில், பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
அவர்கள், சென்னை, பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, விருந்து அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அடுத்த மாதம், 22ம் தேதி, விஜய் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து, ரசிகர்களுடன், விஜய் மக்கள் இயக்க தலைவர், புஸ்ஸி ஆனந்தன், ஆலோசனை நடத்தியுள்ளார். புஸ்ஸி ஆனந்தன், ஏற்கனவே, புதுச்சேரி மாநிலத்தில், எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். இவருக்கு, அரசியல் ரீதியாக, அமைப்பு ரீதியாக, எப்படி செயல்பட வேண்டும் என்ற அனுபவம் இருப்பதால், அவரது ஆலோசனையில், தமிழகம் முழுவதும், பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இது குறித்து, விஜய் ரசிகர் மன்ற வட்டாரங்கள் கூறியதாவது: ‘மெர்சல்’ படத்தில், மத்திய அரசை விமர்சிக்கும் சில காட்சிகள் இடம்பெற்றன.
இதனால், அப்படம் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. பழனிசாமி அரசு தலையிட்டு, படம் வெளியாவதற்கு உதவி செய்தது. அதற்காக, முதல்வர் பழனிசாமியை சந்தித்து, விஜய் நன்றி தெரிவித்தார். லோக்சபா தேர்தலில், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக, விஜய் மக்கள் இயக்கம்   செயல்பட்டால், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு, அ.தி.மு.க., சார்பில், ‘சீட்’ ஒதுக்க வாய்ப்பு உள்ளது.  அதேசமயம், 2021ல், நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு முன், புதுக்கட்சியை துவக்கவும், விஜய் திட்டமிட்டுள்ளார். அதற்கு முன், தமிழகம் முழுவதும், பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளை, விஜய் முடுக்கி விட்டுள்ளார்.  ஜூன், 22ல், தன் பிறந்த நாளன்று, அரசியல் பிரவேசம் தொடர்பான அறிவிப்பை, விஜய் வெளியிடவும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Label