OUR CLIENTS
ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் இன்று மஞ்சள் நீர் கலச அபிஷேகம்! தமிழக ஆளுநர், மத்திய அமைச்சர் பங்கேற்பு
ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் இன்று மஞ்சள் நீர் கலச அபிஷேகம்! தமிழக ஆளுநர், மத்திய அமைச்சர் பங்கேற்பு Posted on 08-May-2018 ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில்  இன்று மஞ்சள் நீர் கலச அபிஷேகம்! தமிழக ஆளுநர், மத்திய அமைச்சர் பங்கேற்பு

வேலூர், மே 8-

வேலூர், ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் 26-ஆவது ஆண்டுவிழாவையொட்டி, 10,008 மஞ்சள் நீர் கலச அபிஷேகம் செவ்வாய்க்கிழமை (மே 8) நடைபெற உள்ளது.இதில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெகத்பிரகாஷ்  நட்டா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து நாராயணி பீடத்தின் மேலாளர் வி.சம்பத், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் ஆண்டு விழா ஆண்டுதோறும் மே 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன் 26-ஆவது ஆண்டு விழாவையொட்டி உலக மக்கள் நன்மைக்காகவும், மழைவளம் வேண்டியும், நாராயணி பீடத்திலுள்ள நாராயணி அம்மனுக்கு பக்தர்களின் கைகளாலேயே மஞ்சள் நீர் கலச அபிஷேகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதையொட்டி, நாராயணி யந்திரத்துக்கு மஞ்சள் நீர் கலச அபிஷேகம் செய்வதற்கான பக்தர்கள் ஊர்வலம் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு நாராயணி வித்யாலயா பள்ளியில் இருந்து புறப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க கடந்த ஆண்டு முதல் பக்தர்கள் மாலை அணிவித்து வருகின்றனர். இதனிடையே, நாராயணி பீடத்தின் 26-ஆவது ஆண்டுவிழாவையொட்டி நாராயணி யாகமும் நடைபெற உள்ளது. இந்த யாகத்தின் பூர்ணாஹுதி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.

Label